தமிழருவி மணியன் அவர்களின் தலைமையில் செயல்பட்டு வந்த காந்திய மக்கள் இயக்கம், கட்சியாக மற்றம் கண்டு தேர்தலில் பங்குபெற வேண்டும் என்கின்ற பொது மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, காந்திய மக்கள் இயக்கத்தின் செயல்குழு மற்றும் பொது குழு ஆகியவை இயக்கத்தை கட்சியாக மாற்ற பிப்ரவரி 9-ம் நாள் மதுரையில் சம்பந்தம் தெரிவித்ததை தொடர்ந்து காந்திய மக்கள் கட்சியாக மாற்றம் கண்டுள்ளது. காந்திய மக்கள் கட்சியின் இணையதள முகவரி - Ganthiya Makkal Katchi

நீங்கள் காண விரும்பும் மாற்றம் உங்களிடம் இருந்து தொடங்கட்டும்!

மகாத்மா காந்தி

சிதறிக் கிடக்கும் நல்லவர்கள் எல்லாம் ஓர் அணியில் திரண்டு நிற்க, நமக்காக உதித்திருப்பதுதான் “காந்திய மக்கள் இயக்கம்

ஒருவர் ஒருவராய் முதலில் நாம் உறுப்பினர் ஆவோம்! அதன் பின்பு பல்லாயிரம், இலட்சம் என்று உறுப்பினர் எண்ணிக்கையைப் பெருக்குவோம்.

“நான் மற்றவர்களைப் போன்ற மனிதன் இல்லை ” – மாவீரன் நெப்போலியன்

ஆம், நண்பர்களே ! நம் காந்திய மக்கள் இயக்கம் மற்றவற்றைப் போன்ற இயக்கம் இல்லை. பணம், பதவி, பெருமை , புகழ் என்று அன்றாடம் அலைபவர்களுக்கு இடையே மக்கள் பணி, பொதுநல நாட்டம், சமூக சேவை, தன்னலமற்ற தியாகம் என்று புதிய தொண்டர்களின் திருக்கூட்டம் காணப் புறப்படுவோம்!!! வாருங்கள் ……

அன்புடன் அழைக்கும்,
தமிழருவி மணியன்.
தலைவர், காந்திய மக்கள் இயக்கம்

சமிபத்திய பதிவுகள்