அஞ்சல் போராட்டம்

posted in: Uncategorized | 0

அஞ்சல் போராட்டம்
(தேதி : 08-09-2014)

தமிழகத்தை பாலைவனமாக மாற்றிவரும் சீமை கருவேலமரங்களை வளர்ப்பதை, பராமரிப்பதை தடுக்கும் நோக்கத்தில் தமிழக அரசு தடை செய்யப்பட்ட தாவரமாக அறிவிக்ககோரி கடந்த ஜூலை 27 ம் தேதி தமிழக அளவில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆனால் அதுபற்றி அரசு கவனத்தில் கொள்ளாமல் இருப்பதால் மீண்டும் அதே கோரிக்கையை மையமாக வைத்து அஞ்சல் அட்டையில் எழுதி மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் தனிப்பிரிவிற்கு அனுப்பும் எளிய முயற்சியில் அனைவரும் ஈடுபட வேண்டுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

———————————————-
அஞ்சல் அட்டையில் எழுத வேண்டிய தகவல் மாதிரி :

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு
வணக்கம்,

தமிழகத்தை பாலைவனமாக மாறிவரும் சீமை கருவேலமரங்களை வளர்ப்பதை, பராமரிப்பதை தடுக்கும் நோக்கத்தில் தமிழக அரசு தடை செய்யப்பட்ட தாவரமாக அறிவிக்ககோரி சீமை கருவேலமரம் ஒழிப்பு இயக்கத்தின் சார்பில் கடந்த ஜூலை 27 ம் தேதி தமிழக அளவில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த செய்தி அனைத்து பத்திரிக்கைகளிலும் வெளிவந்தது. ஆனால் அதுபற்றி அரசுதரப்பிலிருந்து எந்த செய்தியும் வெளியாகவில்லை என்பதால் இம்மரங்களை அழித்து மாற்று மரங்கள் வளர்ப்பதில் ஈடுபட்டுவரும் எங்களுக்கு வருத்தத்தையும், அழிப்பதில் சவாலையும் ஏற்படுத்தியுள்ளது . எனவே தங்கள் அரசின்மீது நம்பிக்கைகொண்ட எங்களைப்போன்றவர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு உள்வாங்கி உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென கேட்டுக் கொள்கின்றோம்.
தங்களின் தனிப்பிரிவிற்கு அனுப்பப்படும் இந்த கடிதத்திற்கு உரிய நடவடிக்கை இருக்குமென நம்புகின்றேன்.
நன்றி.
இப்படிக்கு ,
ஏனாதி அ.பூங்கதிர்வேல்,
மாநில ஒருங்கிணைப்பாளர்
சீமை கருவேலமரம் ஒழிப்பு இயக்கம்,
64/2, குன்னூர் சாலை, அயனாவரம் ,
சென்னை- 600023
————————————————

நன்றி.
– சீமை கருவேலமரம் ஒழிப்பு இயக்கம்.

10650020_363220503825508_1169962625033005188_n

Leave a Reply

Your email address will not be published.