ஆசிரியர் நியமனத்தில் குளறுபடிகளை நீக்குக:

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்காமல், தகுதி காண் மதிப்பெண் (Weightage) முறையை அறிமுகப்படுத்திருப்பது, பத்தாண்டுகளுக்கு முன்னர் படிப்பை முடித்தவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு நிவாரணம் வேண்டி, தமிழக அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக அறப் போராட்டத்தில் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக அவர்கள் ஈடுபட்டு வந்தனர்.

அரசு அவர்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காத நிலையில், பட்டதாரி ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் நான்கு பேர் விஷம் அருந்தி, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு, தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், அவர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை தமிழக அரசு ஏற்று, பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண வேண்டும்

Leave a Reply

Your email address will not be published.