நேதாஜி விழாவில் ஒன்று சேர்ந்த கட்சிகள்

அ.தி.மு.க. அமைச்சர்களும் தி.மு.க. முன்னாள் அமைச்சர்களும் ஒரே மேடையில் ஏறினால் என்ன ஆகும்? தமிழக சுதந்திரப் போராட்ட தியாகிகள் கூட்ட மைப்பு சார்பில், கடந்த 23-ம் தேதி நாமக்கல்லில் நடைபெற்ற நேதாஜி சிலை திறப்பு விழாவில் இரு துருவங்களும் கலந்துகொள்ள ஏற்பாடு செய்து இருந்தார்கள். 

ஏதாவது களேபரம் நிகழ வாய்ப்பு இருக்கிறது என்று வந்தவர்கள், தி.மு.க-வின் மாநிலங்களவை உறுப்பினர் கே.பி.ராமலிங்கமும் அ.தி.மு.க-வின் நாமக்கல் தொகுதி எம்.எல்.ஏ. பாஸ்கரும் ரொம்பவே சகஜ மாக பேசிக்கொண்டதைப் பார்த்து ஆச்சர்யத்தில் ஆழ்ந்து விட்டார்கள்.

சிலை திறப்பு விழா முடிந்ததும் மாவட்ட ஆட்சியர் குமரகுருபனும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பாஸ்கரும் மேடைக்கு வராமல் நழுவினார்கள். அதைத் தொடர்ந்து விழாவில் பேசிய கே.பி.ராமலிங்கம், ”நான் முன்னிலை வகிப்பதால் மேடைக்கு வராமல் இருக்கும் தம்பி பாஸ்கர் அவர்களே…” என்று பேச்சைத் தொடங்கினார். ”நிகழ்ச்சி நடத்துவது என்றாலே அந்தப் பகுதியில் உள்ள வணிகர்களை சுரண்டி நடத்துவார்கள். ஆனால் இந்த நிகழ்ச்சி அப்படி எந்த சுரண்டலும் இல்லாமல் நடைபெறுகிறது. இதைப் பார்த்து அரசியல்வாதிகளான நாங்கள் கற்றுக் கொள்ள வேண்டும்” என்றார்.  

அடுத்துப் பேசிய கொங்கு இளைஞர் பேரவையின் தலைவரும், எம்.எல்.ஏ-வுமான தனியரசு, ”ஆங்கி லேயர் காலத்தில் சுதந்திரத்துக்காகப் போராடிய சுபாஷை, ஒரு தீவிரவாதியாக யாரும் பார்க்கவில்லை. ஆனால், இன்றைய சுதந்திர இந்தியாவில் போராடி னால் தீவிரவாதம் என்கிறார்கள். மொழி, இனம், சமூகப் பற்று இல்லாதவர்களாக தமிழ்ச் சமுதாயம் மாறிவருகிறது. இன்று, பெரும்பாலான மக்கள், காசு வாங்கிக் கொண்டு ஓட்டுப் போட்டு ஜனநாயகத்தை விற்பனை செய்கிறார்கள். இந்தச் சிலைச் திறப்புக்கு ஒரு நடிகை வந்திருந்தால் கூட்டம் அலைமோதி இருக்கும்” என்று டென்ஷன் ஆனார்.

நிகழ்ச்சியின் இறுதியில் பேசியவர் தமிழருவி மணியன். ”காந்தி, காமராஜர், அண்ணா போன்றவர்கள் இன்று, அர சியல் வியாபாரத்துக்கு உதவக்கூடிய ஒரு லேபிளாகத்தான் இருக்கிறார்கள். முதலில் காமராஜரையும் இப்போது வைகோவையும் தோற்கடித்து விருதுநகர் இரண்டு முறை சிறு மைப்பட்டிருக்கிறது. இன்றைய மாணவர்களிடம் மண் பற்றிய சிந்தனை குறைந்து விட்டது. அவர்களின் நோக்கம் பணம் சம்பாதிப்பதுதான். இன்றைய இளைஞரிடம் ரஜினியின் மனைவி பெயரைக் கேட்டால் சொல்வார்கள். ஆனால் காந்தி, நேருவின் மனைவி  பெயர் தெரியாது. ஈழத்தில் படுகொலை நடந்தபோது, தமிழன் ‘மானாட மயிலாட’ பார்த்துக் கொண்டிருந்தான். அங்கு பெண்கள் கற்பழிக்கப்பட்ட நேரத்தில் இங்கு, ‘சூப்பர் சிங்கர்’ பார்த்துக் கொண்டு இருந்தான். நேதாஜி போல் பிரபாகரன் இருக்கிறாரா இல்லையா என்பது தெரியாது. ஆனால் தமிழ் இனம் உள்ள வரை உலகில் பிரபாகரன் இருப்பார்” என்று நம்பிக்கையோடு முடித்தார்.

Nandri: Vikatan

[flagallery gid=1 name=”காந்திய மக்கள் இயக்கம் திருப்பூர் “].

Leave a Reply

Your email address will not be published.