Tasmac

பொது முடக்கத் தளர்வின் போது 27 மாவட்டங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகளுக்குத் தமிழ்நாடு அரசு அனுமதித்துள்ளது. எத்தனை முறை கதறினாலும், எத்தனை பாதிப்புகளை எடுத்து வைத்தாலும், ஆண்ட அரசாக இருந்தாலும் சரி, தற்போது ஆளுகின்ற அரசாக இருந்தாலும் சரி, அவை அவர்களின் காதுகளுக்கு எட்டுவதில்லை. கொரோனாக் … Continued

ஜு.வி.ஸ்பெஷல் ஸ்டோரி : தாலிக்குத் தங்கம்…தாலி அறுக்க டாஸ்மாக் !

‘தாலிக்குத் தங்கம் கொடுத்துவிட்டு, தாலியை அறுக்கிறார்களே! டாஸ்மாக் கடைகளைத் திறந்து தமிழ் பெண்களின் தாலிகளை தமிழக அரசே அறுக்கிறது!’ என பொங்குகிறார்கள், சமூக ஆர்வலர்கள். தமிழ்நாட்டில், குடிநோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. குடியின் காரணமாக, கல்லீரல் பாதிப்பு உட்பட உடல்நிலை மிக மோசமான அளவுக்கு நலிவுற்று, மரணத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறார்கள் லட்சக்கணக்கான குடிநோயாளிகள் என்று … Continued

ஜு.வி.ஸ்பெஷல் ஸ்டோரி : கடையை மூடினாலும் சரக்கு கிடைக்கும் !

ஜு.வி.ஸ்பெஷல் ஸ்டோரி : கடையை மூடினாலும் சரக்கு கிடைக்கும் ! தமிழ்நாட்டில் கோடி​க்கணக்கில் பணம் கொழிக்கும் இடங்களாக டாஸ்மாக் பார்கள் விளங்கு​கின்றன. ஒவ்​வொரு பார்களிலும் தினமும் லட்சக்கணக்கான ரூபாய் வருமானம் கிடைக்கிறது. எனவேதான், பெரும்பாலான பார்களை வளைத்துப்போட்டு வைத்திருக்​கிறார்கள் செல்வாக்கு மிகுந்த கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள். 

குடி நோயாளியான நண்பர் ஒருவர், தன் அனுபவத்தைக் கூறுகிறார், கேளுங்கள்.

posted in: மதுவிலக்கு | 0

டி.வி.எஸ். சோமு 1 மணி · தொகுத்தது · குடி நோயாளியான நண்பர் ஒருவர், தன் அனுபவத்தைக் கூறுகிறார். கேளுங்கள். என் இருபது வயதிற்குள் மதுப்பழக்கம் ஏற்பட்டது. நண்பர்களுடன் விளையாட்டாக ஆரம்பித்ததுதான். கணினி பட்டயப் படிப்பு தேறியதால் பல நிறுவனத்தில் வேலை கிடைத்தது.

மதுவற்ற மாநிலமாக, தமிழகம் மலர்ந்திட தொடர் நடவடிக்கைகள்

posted in: மதுவிலக்கு | 0

மதுவற்ற மாநிலமாக, தமிழகம் மலர்ந்திட தொடர் நடவடிக்கைகள் – மகாத்மா காந்தி பிறந்த நாள் – கர்ம வீரர் காமராஜர் நினவு நாள் (02 10 2014) – தமிழகம் முழுவதும் மதுவிலக்கு வேண்டி 1000 கிமீ பாதயாத்திரை செல்ல உள்ளோம். ஆதரவு தருக:

2016 சட்டப்பேரவை தேர்தலில் மதுக்கடைகளை மூடப்படுவதே மக்களின் முதன்மையான கோரிக்கை: தமிழருவி மணியன்

2016 சட்டமன்றத் தேர்தலின் போது பூரண மதுவிலக்கை அறிவிக்க வேண்டுமென்று காந்திய மக்கள் இயக்கம் தமிழக அரசை வேண்டிக்கொள்கிறது என காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்