மதுவுக்கு எதிரான காந்திய வழி, அறப் போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பது ஏன்?

இன்றைக்கு (260622), உலகளாவிய போதை ஒழிப்பு தினம். இதனை ஒட்டி சிவகங்கை மாவட்ட காந்திய மக்கள் இயக்கம் சார்பாக, காரைக்குடி நகரம், காந்திபுரம் வ உ சி சாலையில் உள்ள மதுக்கடைக்கு (டாஸ்மாக்) வரும் குடிகாரர்களிடம், பல குற்றங்களுக்கு ஊற்றுக் கண்ணாக விளங்கும், மதுபோதைப்  பழக்கத்திலிருந்து விடுபட, மதுவை அருந்துவதால் அவர்களுக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும் ஏற்படும் … Continued

அக்னிபத் திட்டம் – மாநில அரசுடன் இணைந்து செயல்படுத்துக…

அக்னிபத் திட்டம், இந்திய இராணுவத்தின் முப்படைகளிலும், 4 ஆண்டு காலத்திற்கு குறுகிய கால வீரராக இளைஞர்கள், இளம்பெண்களை சேர்க்கும் திட்டம் ஆகும். 17.5 வயது முதல் 21 வயதிலான ஆண், பெண் இருபாலரும் இத்திட்டத்தில் இணையலாம். 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் அவர்கள் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம் ஆகும். உடற்தகுதியை பொறுத்தவரை இராணுவத்தில் சேருவதற்கு … Continued

பெரியாறு அணைப் பிரச்சனையில் அரசியல் கச்சேரி தேவையா?

10 11 2021 பெரியாறு அணைப் பிரச்சனையில் அரசியல் கச்சேரி தேவையா?  நம்மை அடிமைப்படுத்திய அன்னியனுக்கு இருந்த மனித நேயம் கூட நம் சகோதர மாநிலத்தவர்கள் இடம் இல்லை என்பதை முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் காண முடிகிறது. கேப்டன் பென்னி குக், 1886இல் இந்த அணையைக் கட்ட மேலும் பணம் தர முடியாது என்று பிரிட்டிஷ் … Continued

தேவைதானா, இந்தக் குழப்பம்?

02 11 2021 தேவைதானா, இந்தக் குழப்பம்?  மகிழ்வுடன் கொண்டாடப்பட வேண்டிய தமிழ்நாடு தினம், தற்போது குழப்பங்களால் சூழப்பட்டு உள்ளது. இந்தியாவில் 1956ஆம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. இதனையடுத்து இந்தியா 14 மாநிலங்களாகவும், 6 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது. அந்தத் தேதியைப் பல மாநிலங்கள், மாநில தினமாகக் கொண்டாடி வருகின்றன. இதேபோல … Continued

பற்றி எரியும் விலைகள்… பதறும் மக்கள்…

09 07 2021 பற்றி எரியும் விலைகள்… பதறும் மக்கள்… எரிபொருள் விலையும், சமையல் எரிவாயு உருளை விலையும், தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கின்றன. நாட்டின் பல பகுதிகளில், எரிபொருள் விலை சதம் அடித்து விட்டது. எரிவாயு உருளை விலை, கடந்த ஜூன் மாதத்தில் 825 ரூபாய் இருந்தது, இன்றைக்கு 850 ரூபாய் ஆக உயர்ந்துவிட்டது; வருகின்ற காலங்களில், ரூபாய் ஆயிரத்தை எட்டிவிட வாய்ப்புகள், “பிரகாசமாக” உள்ளது. வேளாண் விளைபொருட்கள், தொழிற்சாலை உற்பத்திகள், அவைகளுக்குத் … Continued

மாற்று அரசியலை வளர்த்தெடுக்கும் ரஜினியின் முயற்சியில் காந்திய மக்கள் இயக்கமும் ….

ஜீனியர் விகடன் 07 01 2018 புத்தாண்டில், ஒட்டுமொத்த இந்திய அரசியல் அரங்கையே அதிரவைத்திருக்கிறார் ரஜினிகாந்த். ‘ஆன்மிக அரசியல், காவலர் படை’ எனத் தனது அரசியல் பிரவேச அறிவிப்பிலேயே ‘புதிய பாதை’யைக் கோடிட்டுக் காட்டியிருக்கிறார். இந்த நிலையில், ரஜினியின் அரசியல் ஆலோசனை குருவாகக் கருதப்படும் ‘காந்திய மக்கள் இயக்க’த் தலைவர் தமிழருவி மணியனைச் சந்தித்தோம். ‘‘நான் … Continued

ஆன்மிக அரசியலில் ஊழலுக்கு இடமில்லை – தமிழருவி மணியன்

நடிகர் ரஜினியின் ஆன்மிக அரசியலில் ஊழலுக்கும், குற்றங்களுக்கும் இடம் கிடையாது என காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி என்று தமிழருவி மணியன் உறுதியாக தெரிவித்திருந்தார். அவர் அரசியலுக்கு வரவேண்டி அடித்தளம் அமைக்கும் வகையில் காந்திய மக்கள் இயக்கம் சார்பில் திருச்சியில் கடந்த ஆகஸ்ட் 18-ம் … Continued