வேற்றுமைக்கு இஸ்லாமில் இடமில்லை… தமிழருவி மணியன்

வேற்றுமைக்கு இஸ்லாமில் இடமில்லை … தமிழருவி மணியன் (தினமணி ஈகைப் பெருநாள் மலர் – 2016) உயர்ந்த அன்பையும், உலக சகோதரத்துவத்தையும், பேதங்களற்ற சமத்துவத்தையும் அடித்தளமாக்க் கொண்டு இந்தப் பூவுலகில் இஸ்லாம் மலர்ந்தது. ‘இஸ்லாம்’ என்ற அரபுச் சொல்லுக்கு ஆண்டவனிடம் அடைக்கலமாதல் என்றும், ‘அமைதி’ என்றும் பொருள் உண்டு. மண்ணில் உள்ள மாந்தர் அனைவரும் ஆதாம் … Continued

போலி கோஷங்களும் பொய்மை வேஷங்களும்

posted in: கட்டுரைகள் | 1

விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கிறது. ஒவ்வொரு கட்சியும் அரசியல் சதுரங்கத்தில் சாமர்த்தியமாக காய்களை நகர்த்தும் காரியத்தில் ஈடுபட்டுவருகின்றன. நரேந்திர மோடி பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டதும் வகுப்புவாத எதிர்ப்பு வேள்வியில் தங்கள் வாழ்க்கையை முற்றாக அர்ப்பணித்துவிட்டவர்கள் சிறுபான்மையினர் நலன் காக்க நவீன குருúக்ஷத்திரத்தில் வந்து குவிந்துவிட்டனர். ஒரு பக்கம் “மதச்சார்பின்மை’ என்ற மந்திரகோலை மகிழ்ச்சியுடன் … Continued

மன்னிப்பு கேட்கட்டும் மோடி!

‘என்னுடைய மதத்துக்குப் பூகோள எல்லைகள் எதுவும் இல்லை. உண் மையும் அன்புமே என் மதத்தின் அடித்தளம். யாரையும் வெறுக்க என் மதம் இடம்தராது. மனிதர்களை இணைப் பதற்காகவே மதம்; பிரிப்பதற்காக அன்று’ என்று விளக்கம் அளித்தவர் அண்ணல் காந்தி. ‘சக மனிதருக்குத் தொண்டாற்றுவதே சமயத்தின் நோக்கம்’ என்று தொடர்ந்து வலி யுறுத்திய மகாத்மா அவர். அறத்தின் … Continued

சாதி வெறிக்கு சாவு வந்து சேராதோ!

posted in: கட்டுரைகள் | 1

சாதி வெறிக்கு சாவு வந்து சேராதோ! — தமிழருவி மணியன் ஜூனியர் விகடன் 14 07 2013 இளவரசன் ஒரு தலித்தாகவும் திவ்யா ஒரு வன்னியப் பெண்ணாகவும் பிறக்க வேண்டும் என்று பல்லூழிக் காலம் தவமிருந்து இறைவனிடம் வரம் வாங்கியா இந்த மண்ணில் வந்து சேர்ந்தார்கள்? நம்முடைய தனிப்பட்ட இச்சையின்படியா ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு சாதிச்சாயம் வாய்த்திருக்கிறது? … Continued

உண்மையான ஹீரோ

posted in: கட்டுரைகள் | 2

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அன்று மனுநீதி நாள். பொதுமக்களின் வரிசையில் நின்ற அந்த முதியவர், கலெக்டர் ராஜேந்திரனிடம் கத்தை கத்தையாய் மனுக்களை கொடுக்க, அதை கலெக்டர் கவனமாக வாங்கி உடனடியாக பரிசீலிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட…்டார். அதிகாரிகளோ அந்த முதியவரை பயப் பார்வை பார்த்தபடி இருந்தனர். யார் இவர்?

வேண்டாம் வேறொரு முகத்தின் விஸ்வரூபம்!

posted in: கட்டுரைகள் | 0

கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’ படத்துக்கு எதிராக எழுந்து நிற்கும் பிரச்னைகளால் பாதிக்கப்படப் போவது ஒரு தனி மனிதன்தானே என்று, அறிவுலகம் விலகி நின்று வேடிக்கைப் பார்க்கலாகாது. மதநல்லிணக்கம் ஆழமாக வேரூன்றியிருக்கும் தமிழ் மண்ணில் ஒரு திரைப்பட எதிர்ப்பு தவறான பாதிப்புகளை உருவாக்கி விடாமல் தடுத்து நிறுத்தும் பொறுப்பு இங்கே அனைவருக்கும் உண்டு. பாபர் மசூதி 1992-ல் இடிக்க…ப்பட்ட … Continued

பிரதமருக்கு ஒரு கடிதம் – தமிழருவி மணியன்

அன்பிற்கினிய பாரதப் பிரதமர் மாண்பு​மிகு மன்மோகன்சிங் அவர்களுக்கு… வணக்கம்! இந்திய ஜனநாயகம் இந்த எளிய​வனுக்​கும் வழங்கியிருக்கும் உரிமையின் அடிப்​படையில் உங்களுக்கு இந்த முடங்கலின் மூலம், என்னை உறங்கவிடாத உணர்வுகளை வெளிப்படுத்த விழைகிறேன். தமிழகத்தில் உள்ளவர்கள் தலைசிறந்த பண்பாட்​டுக்கு உரியவர்கள்; அன்பு சார்ந்து, அமைதி காத்து, இந்திய ஒருமைப்பாட்டை இதயங்களில் இருத்தி, சக மனிதர்களை உடன் பிறந்த … Continued

பிணி தீர்க்குமா ஈழ பிக்னிக்? – தமிழருவி மணியன்

posted in: கட்டுரைகள் | 1

‘உயர்ந்த விஞ்ஞானியாவதற்கு ஒருவன் அறிவியலில் ஆழ்ந்த ஞானம் அடைய வேண்டும். தேர்ந்த வழக்கறிஞராகவோ, சிறந்த மருத்துவராகவோ வர விரும்பினால், சட்டமோ, மருத்துவமோ முறையாகக் கற்றாக வேண்டும். ஆனால், ஓர் அரசியல்வாதியாக உருவாவதற்குத் தன்னுடைய சொந்த நலன்களைப் பராமரிக்கத் தெரிந்தால்… அதுவே போதும்’ என்றார் அறிஞர் மேக்ஸ் ஓரேல். ஈழத் தமிழர் விவகாரத்தில் நம் அரசியல் தலைவர்கள் … Continued

மாற்று அரசியல் மலராதா..?

‘மனிதர்கள் செய்யக்கூடிய மிக மோசமான ஏழு பாவங்களில் ஒன்று, கொள்கையற்ற அரசியல்’ என்றார் அண்ணல் காந்தி. ஏற்றுக்கொண்ட கொள்கைகளில் சிறிதும் சமரசம் இன்றி மக்கள் நலனுக்காகவே இயங்கும் அரசியல் கட்சி ஒன்றுகூட இன்று இந் தியாவில் இல்லை என்பதுதான் உண்மை. தான் நேர்ந்து கொண்ட லட்சியப்பாதையில் பொது மக்களை நடத்திச்செல்ல முயலாமல், அவர்களுடைய மலினமான மனோபாவங்களைத் … Continued

‘உச்சிதனை முகர்ந்தால்’ சாதாரணத் திரைப்படம் அல்ல – உயர்ந்த பாடம்.

தமிழ் சினிமாவுக்கென்று அன்றுதொட்டு இன்றுவரை தவிர்க்க முடியாத சில அடிப்படை அம்சங்கள் உண்டு. எதையும் சாதிக்கவல்ல ஒரு நாயகன் அவனையே நினைத்து அவனுக்காகவே நெகிழ்ந்து அவனுள் கலந்து கரைந்துவிட உருகித் தவிக்கும் ஒரு நாயகி. இயற்கைக்கு எந்த வகையிலும் பொருந்தாமல் கடற்கரையிலும் பூந்தோட்டத்திலும் பரபரப்பான வீதிகளிலும் கட்டியணைத்துக் காம விகாரத்தை வார்த்தைகளிலும் அங்க அசைவுகளிலும் வெளிப்படுத்தும் … Continued