இந்தியராக இருக்கவிடுங்கள்.. பிரதமருக்கு ஒரு கடிதம்

அன்பிற்கினிய பாரதப் பிரதமர் மாண்பு​மிகு மன்மோகன்சிங் அவர்களுக்கு… வணக்கம்! இந்திய ஜனநாயகம் இந்த எளிய​வனுக்​கும் வழங்கியிருக்கும் உரிமையின் அடிப்​படையில் உங்களுக்கு இந்த முடங்கலின் மூலம், என்னை உறங்கவிடாத உணர்வுகளை வெளிப்படுத்த விழைகிறேன். தமிழகத்தில் உள்ளவர்கள் தலைசிறந்த பண்பாட்​டுக்கு உரியவர்கள்; அன்பு சார்ந்து, அமைதி காத்து, இந்திய ஒருமைப்பாட்டை இதயங்களில் இருத்தி, சக மனிதர்களை உடன் பிறந்த … Continued

”நன்றி கொன்றவனாகவே நீடிக்க விரும்புகிறேன்!”

கலைஞருக்கு மீண்டும் ஒரு கடிதம்! அன்பிற்கும் மதிப்பிற்கும் என்றும் உரிய ஐயா கலைஞர் அவர்களுக்கு… வணங்கி மகிழ்கிறேன். உங்களுக்கு நான் வரைந்த இரண்டு கடிதங்களை ‘முரசொலி’ இதழின் முதல் பக்கத்தில் வெளியிட்டு ‘நன்றி’ மறந்த என்னை நயத்தகு நாகரிகத்துடன் ‘வாழ்த்தி’ இருக்கிறீர்கள். பெருந்தலைவர் காமராஜருக்கு நினைவாலயம் எழுப்பிய உங்கள் பெருந்தன்மைக்கு இன்றும் என் நெஞ்சார்ந்த நன்றியைச் … Continued

எல்லாக் கட்சிகளும் உங்கள் ஏவல் கூவல்களா? – தமிழருவி மணியன்

நன்றி: ஜூனியர் விகடன் அன்பிற்கினிய சகோதரி… வணக்கம். வளர்க நலம். உங்களுக்கு இவ்வளவு விரைவில் இன்னொரு கடிதம் எழுத நேரிடும் என்று நான் எதிர்பார்க்க​வில்லை. நீங்கள் காலம் தந்த பாடத்தில் ஞானம் பெற்றிருப்பீர்கள் என்று நம்பினேன். உங்கள் அணுகு​முறையில் நல்ல மாற்றங்கள் நிகழ்ந்திருக்கக்கூடும் என்று மக்களும் நம்பி மகிழ்ச்சிகொண்டனர். ஆனால், எந்த வகையிலும் நீங்கள் மாறவே … Continued

To, விஜயகாந்த், FROM, தமிழருவிமணியன்

posted in: கடிதங்கள் | 1

நன்றி: ஜூனியர் விகடன் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு… வணக்கம். வளர்க நலம்! ‘மக்களோடும் தெய்வத்தோடும் மட்டும்தான் எனக்குக் கூட்டணி’ என்றவர் நீங்கள். எந்த அரசியல் கட்சியும் தேர்தல் களத்தில் தனித்து நிற்கத் தயங்கியபோது, மாநிலம் தழுவிய மூன்று தேர்தல்களில் தொடர்ந்து தனித்து நின்ற உங்கள் துணிச்சல் மனம் திறந்த பாராட்டுக்கு உரியது. கூட்டணி அரசியலில் … Continued

மருத்துவர் ராமதாஸுக்கு ஒரு திறந்த மடல்! – தமிழருவி மணியன்

நன்றி: ஜூனியர் விகடன் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் அவர்களுக்கு… வணக்கம். வளர்க நலம். ஒவ்வொரு தேர்தலின்போதும் எந்த அணியில் நீங்கள் இருப்பீர்கள் என்று இறுதி நேரம் வரை அரசியல் கட்சித் தலைவர்களையும், வாக்காளர்களையும் ஒரு தெளிந்த முடிவுக்கு வர முடியாமல் திகைப்படையச் செய்வதில், உங்களுக்கு இணை சொல்ல இன்னொ​ருவர் இல்லை! நீங்கள் … Continued

ராகுல் காந்திக்கு ஒரு திறந்த மடல்… – தமிழருவி மணியன்

நன்றி: ஜூனியர் விகடன் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி அவர்களுக்கு… வணக்​கம். வளர்க நலம்! மூத்து முதிர்ந்து தளர்ந்த நிலையில் தள்ளாடும் காங்கிரஸுக்கு இளைய ரத்தம் பாய்ச்சத் துடிக்கும் உங்களுக்கு, நான் கடிதம் வரைவதற்கு ஒரு காரணம் உண்டு! ஏனெனில், உள்ளாட்சித் தேர்தலில் ஒர் உறுப்பினரைக்கூடச் சுயமாகத் தேர்வு செய்து அறிவிக்க … Continued

ஜெயலலிதாவுக்கு ஒரு திறந்த மடல்!

posted in: கடிதங்கள் | 0

நன்றி: ஜூனியர் விகடன் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு… வணக்கம். வளர்க நலம். உங்களை நினைத்தால் ஒரு பக்கம் வியப்பாகவும், இன்னொரு பக்கம் வேதனை​யாகவும் இருக்கிறது. அன்று முதல் இன்று வரை இது ஓர் ஆணாதிக்க உலகம். நீங்கள் இருந்த திரைப்பட உலகமும், இருக்கும் அரசியல் உலகமும் முழுக்க முழுக்க ஆணாதிக்கத்தின் மோசமான … Continued

கலைஞருக்கு ஒரு திறந்த மடல்

posted in: கடிதங்கள் | 0

நன்றி : ஜுனியர் விகடன் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு… வணக்கம். வளர்க நலம்! என் பால்ய காலந்தொட்டு உங்கள் அரசியலை நான் பார்த்து வருகிறேன். நீங்கள் ஒரு சாகச அரசியல்வாதி என்பதில் இங்கு யாருக்கும் சந்தேகம் இல்லை! தமிழகம் கண்ட தலைவர்களில் பல வகைகளில் நீங்கள் தனித்துவம் மிக்கவர். காமராஜரைப் போலவே பாரம்பரியப் பின்புலம், … Continued